அடி எண்ணடி ராக்கம்மா...பல்லக்கு நெளிப்பு... (பட்டிகாடா பட்டனமா)

அடி ராக்கு, என் மூக்கு, என் கண்ணு, என் பல்லு, என் ராஜாயி . அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு மச்சான இழுக்குதடி . அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு மச்சான இழுக்குதடி . அஞ்சாறு ரூபாய்க்கு மணி மால உன் கழுத்துக்கு பொருத்தமடி அஞ்சாறு ரூபாய்க்கு மணி மால உன் கழுத்துக்கு பொருத்தமடி அம்மூரு மீனாட்சி பார்த்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி அஹ அம்மூரு மீனாட்சி பார்த்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என் அத்த, அவ பெத்த, என் சொத்தே, அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ . அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு மச்சான இழுக்குதடி . தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அஹ சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே என் கண்ணு, என் மூக்கு, என் பல்லு, என் ராஜாயி, கல்யாண வைபோகமே . அட பிபிபி டும்டும்டும் பிப்பீபி டும்டும்டும் பிப்பீபி டும்டும் டும்டும் டும் அட பிபிபீ பீபீபீ பீபீபீ டும்டும்டும் பிப்பீபி டும்டும் டும்டும் டும்... திரைப்படம்: பட்டிக்காடா பட்டணமா; ஆண்டு: மே 6th,, 1972; இசை: M.S.விஸ்வநாதன்; இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்; பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்; நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சுபா; தயாரிப்பாளர்: பி. மாதவன்; - அருண் பிரசாத் மூவீஸ்; இயக்குனர்: பி. மாதவன்.
இந்த பாடலில் சிவாஜி வேட்டியை தூக்கி பிடித்துக்கொண்டு விசில் அடித்தபடி ஜெ.வை சுற்றி சுற்றி ஆடுவார். என்ன ஒரு ஆட்டம் அம்மாடியோவ்! அப்போது திரையரங்கமே ரசிகர்களின் "விசில்" சத்தத்தால் அதிர்ந்தது. சிவாஜி & ஜெ. நடித்து திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடிய படம் "பட்டிக்காடா பட்டணமா". சீறி வரும் காளை

Comments